Monday, September 20, 2010
43- காகமும் ...அறிவுரையும்.(நீதிக்கதை)
ஒரு மரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.அதே மரப்பொந்தில் ஒரு ஆந்தை இருந்தது.
அது நள்ளிரவில் காக்கை தூங்கி இருக்கும் வேளையில் வந்து அதை விரட்டி அடித்தது.
மறு நாள் வேறொரு மரத்தில் காக்கை கூடு கட்டியது.அதையும் தெரிந்து கொண்ட ஆந்தை அங்கேயும் சென்று இரவில் காக்கையை விரட்டியது.
அடுத்த நாள் காக்கைஅடுத்த ஊரிலிருந்த தன் தாய் காகத்திடம் இதைப் பற்றிக் கூறியது. 'இதிலிருந்து தப்ப வழி என்ன?' என்று கேட்டது.
அப்போது தாய் காகம்..'ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஆகவே நீ பகலில் சென்று ஆந்தையை விரட்டு' என்றது.
காகம் அதன் படியே செய்ய ...ஆந்தை காகத்தை விட்டு ஓடியது.
காகத்தின் புத்திசாலித்தனமும்...தாயார் சொன்ன அறிவுரையும்...அதையும் அதன் குஞ்சுகளையும் காப்பாற்றியது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ரொம்ப நல்லா எழுதி இருக்கறிங்க காஞ்சனம்மா ; .
என் பசங்களுக்கு காலாண்டு பரிட்சை சமயமாதலால்
ப்ளாக் பக்கம் அதிகமாக வர முடியவில்லை
இனி படித்து பயன் பெற தொடர்ந்து வருவேனாக்கும்
வருகைக்கு நன்றி Priya.
மேடம் .,அடுத்த பதிவு எப்போ தர போறீங்க !
Post a Comment