Thursday, February 18, 2016

153. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்



2 .ஒன்றே கடவுள்

ஒரு ஊரில்,துணிகளுக்கு சாயம் பூசும் ஒருவன் இருந்தான்.

அவனிடம் பாத்திரம் நிறைய வண்ணக்கலவை இருந்தது.அந்த ஊர் மக்கள் தங்கள் ஆடைக்கு எந்த நிறம் கேட்டு வருகின்றார்களோ,அந்த வண்ணப்பாத்திரத்தில்
தோய்த்தெடுத்து அவர்கள் கேட்கும் நிறத்தைக்கொ டுத்து அனுப்புவான்.

ஒரு முறை ஒருவன் வந்தான்.' என் துணிக்கு என்ன நிறம் வேண்டும் எனக் கேட்கத் தெரியவில்லை.தங்கள் பாத்திரத்தில் என்ன நிறம் வைத்திருக்கிறீர்களோ அந்த நிறத்தைத் தோய்த்து தாருங்கள் என்றான்.

அந்த சாயக்காரனைப் போலத்தான் பரம்பொருளும்.

சாயக்காரனிடம் நாம் எந்த சாயத்தைக் கேட்டாலும் அதையே அவன் மக்களுக்கு தருவது போல், பரம்பொருளிடம் தத்தம் தேவைகளை எவ்வெவ்வாறு கேட்கிறாரோ
அவ்வவ்வாறே அவர்களுக்கு உதவுகின்றார்.
 அவருக்கு பாரபட்சம் கிடையாது. சாயப்பாத்திரம் போல கடவுள் ஒருவரே ஆவார்.

அவர் பல வழிகளிலும்,பல நிறங்களிலும்.பல வடிவங்களிலும் மாறி மாறி அருள்  பொழிகின்றார்.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

கருத்துள்ள சிறுகதை. நமக்கு என்ன தர வேண்டுமென்பது ஆண்டவனுக்கே தெரியும் எனும்போது நாம் எதற்கு கேட்க வேண்டும் என்பதை சிறப்பாக விளங்க வைத்த கதை.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்க்ட் நாகராஜ்