Friday, January 9, 2015

142. இறைவனின் படைப்பில் ............. (நீதிக்கதை)




ஒரு காட்டில் ஒரு முயல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தது ஒருஆமை....
'நம்மால் ஏற்கனவே வேகமாக போகமுடியாது...இதில்,முதுகில் வேறு பாரமாக ஓடு.
முயலைப் பார்த்து பொறாமைப் படுவதில் பயன் இல்லை....ஆண்டவனைத்தான் என்னை இப்படிப் படைத்ததற்காக நொந்து கொள்ளவேண்டும்.' என எண்ணியது.
அப்போது ....அன்று இறை எதுவும் கிடைக்காததால் அலைந்து கொண்டிருந்த சிங்கம்,விளையாடிக்கொண்டிருந்த முயலைப்பிடிக்க பாய்ந்தது.
முயல் ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்தது.ஆமையோ, தன் கூட்டுக்குள் முடங்கியது
சிறிது நேரத்தில் சிங்கம் சென்றுவிட ....முயல் பயத்தில் அவ்விடம் வந்ததும், ஆமை தன் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது.
ஒவ்வொரு விநாடியும்....மரணபயத்திலேயே முயல் வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கையில்,விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள தன் முதுகிலேயே தனக்கு கூட்டையும் கொடுத்த இறைவனை நிந்தித்தது எவ்வளவு தவறு என உணர்ந்தது.
இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு.அந்த தனித்தன்மையை உபயோகித்து ...ஆபத்துக் காலங்களில் தப்பிக்கலாம்.
இதுவே இறைவன் கருணை என்பதை உணர்ந்தது ஆமை

6 comments:

லதானந்த் said...

அன்புடையீர்!
கோகுலம் இதழுக்கு சிறுகதைகளை எழுதி அனுப்ப இயலுமா? என்னுடைய அலைபேசி எண் 9442417689. இயன்றால 044-4343888888 அல்லது 43438899 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.
லதானந்த்

Yaathoramani.blogspot.com said...

அருமையான நீதிக்கதை

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...


@ லதானந்த்.
நன்றி .தொலைபேசுகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...

Kanchana Radhakrishnan said...

@ Ramani S

நன்றி Ramani Sir

Kanchana Radhakrishnan said...

நன்றி
திண்டுக்கல் தனபாலன்