Wednesday, October 23, 2013

129 " உன் திறமையை உணர் "........ (நீதிக்கதை)



பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து ரமேஷ் அழுது கொண்டிருந்தான்.

அலுவலகத்திலிருந்து வந்த அப்பா ரமேஷிடம் அவன் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார்.

ரமேஷ், " அப்பா...நான் தொடர்ந்து காலாண்டு,அரையாண்டு தேர்வுகளில் கணக்கில் குறைவான மதிப்பெண்களே வாங்குகிறேன்..எனக்கு கணக்கு வராது...என்னால் அப்பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியாது.....' என்றான்.

அதற்கு அப்பா...'ரமேஷ்...உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள் ' என சொல்ல ஆரம்பித்தார்.

ஒருவனிடம் குட்டியானை ஒன்று இருந்தது.அது ஓடிவிடக்கூடாது என்பதற்காக ...ஒரு கயிற்றைக் கொண்டு அதன் காலில் கட்டி ...பக்கத்திலிருந்த தூணில் இணைத்துவிட்டான்.

யானை வளர்ந்து. பெரிய யானையானது.அது இப்போது நினைத்தால்...அந்த தூணுடன் சேர்ந்து கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியிருக்க முடியும்.ஆனாலும் ...தான் குட்டியாயிருந்தபோது இருந்த பலமே இப்போதும் இருக்கிறது என யானை எண்ணியது.தன்னால் இப்போதும் தப்ப முடியாது என எண்ணியது. அது போல..உனக்கு கணக்கு வராமல் இருந்திருக்கலாம்..ஆனால் நீ முயன்றால் கணக்கில் புலி ஆகலாம்...

நீ செய்யவேண்டியதெல்லாம் ...'உன்னிடம் உள்ள திறமையை புரிந்து கொண்டு படிக்கவேண்டும்.நம்மால் முடியாது என நினைத்து சும்மா  இருந்தால், யானையின் நிலை தான் உனக்கும்.. முயற்சி திருவினையாக்கும் என்பதை நினைவில் கொள்.

பின்னர், ரமேஷ் தன் திறமையை உணர்ந்து படித்து, கணிதத்தில் வகுப்பில்  முதலிடத்தில் வந்தான்.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தந்தை சொன்ன விதம் அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

ராஜி said...

நல்லதொரு நீதிக்கதை. பகிர்வுக்கு நன்றி!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமையான அறிவுரை தரும் கதை..நன்றி!

Kanchana Radhakrishnan said...

@
திண்டுக்கல் தனபாலன்

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்

Kanchana Radhakrishnan said...

@ ராஜி

Thanks ராஜி.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பாக புரிய வைத்த தந்தை.

நல்ல நீதிக்கதை பகிர்வுக்கு நன்றிம்மா....

Dhiyana said...

நல்ல நீதிக்கதை அம்மா..நன்றி..

Kanchana Radhakrishnan said...

@ கிரேஸ்

Thanks கிரேஸ்.

Kanchana Radhakrishnan said...

@ வெங்கட் நாகராஜ்.

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

ADHI VENKAT said...

நல்லதொரு நீதியை புரிய வைத்த தந்தை. பகிர்வுக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

Thanks Adhi Venkat.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தியானா