Wednesday, August 7, 2013

127. ' தூற்றுவார் தூற்றட்டும் ' (நீதிக்கதை)



கௌதம புத்தர் துறவியானதும் தினமும் தனக்கு வேண்டிய உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார்.

ஒரு நாள் ஒரு வீட்டில் அவர் பிச்சை கேட்டபோது ...' போ..போ.. தடிமாடு மாதிரி இருந்துகொண்டு, ஏன் பிச்சை எடுக்கிறாய்' என விரட்டினார் அந்த வீட்டில் இருந்தவர்.

உடனே புத்தர் ' ஐயா' என அவரை அழைத்தார்'

அந்த வீட்டுக்காரரும் ' என்ன?' என்றார்.

நீங்கள் எனக்கு ஏதேனும் பிச்சை போட்டிருந்தால் அது யாருக்கு சொந்தம்' என கேட்டார்.

' போட்டிருந்தால் அது உனக்கு சொந்தம் ' என்றார் வீட்டுக்காரர்.

'நீங்கள் போடும் பிச்சையை நான் மறுத்துவிட்டால்' என வினவினார் புத்தர்
.
'எனக்குதான் சொந்தம்'  

'சற்று முன்பு என்னை விரட்டினீர்களே ...அதை ஏற்க நான் மறுத்துவிட்டேன்...எனவே...அது உங்களுக்கு சொந்தம் ' என்று கூறிச்சென்றார்.

நம்மை தூற்றுபவர்களைக்கண்டு ...பதிலுக்கு நாமும் தூற்றக்கூடாது.நாம் மௌனமாய் இருந்தால்....தூற்றப்பட்ட வார்த்தைகள் தூற்றுபவரைச் சாரும் என்பதை நாமும் உணர்வோம், நம்மை தூற்றுபவரும் உணர்வர்..

6 comments:

சென்னை பித்தன் said...

சிறுவரை விட பெரியவர்களுக்கே இது நன்கு தெரிய வேண்டும்!

ADHI VENKAT said...

அருமையான நீதி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Aadhi.

Kanchana Radhakrishnan said...

@ சென்னை பித்தன்

வருகைக்கு நன்றி சென்னை பித்தன்.

வெங்கட் நாகராஜ் said...

புரிந்து கொண்டால் வாழ்வில் ஆனந்தம்.... மனதில் நிம்மதி....

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.....

Kanchana Radhakrishnan said...

நன்றி வெங்கட் நாகராஜ்