Friday, February 15, 2013

119 - மயிலும்..கொக்கும்.. (நீதிக்கதை)

               


ஒரு சோலையில் அழகான மயில் ஒன்று இருந்தது.அதற்கு தன் அழகுக் குறித்து மிகவும் கர்வம் இருந்தது.ஒருநாள் அந்த சோலைஅருகே இருந்த குளக்கரையில் அது தன் தோகையை விரித்து ஆட ஆரம்பித்தது.

அக்குளக்கரையில் கொக்கு ஒன்று...பெரிய மீன் வருமா..அதைக் கொத்திக் கொண்டு ஒடலாமா..? என்ற எண்ணத்தில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு இருந்தது.

கொக்கைப் பார்த்த மயில், 'கொக்கே! நீயும் நல்ல வெண்மை நிறத்தில் அழகாகத் தான் இருக்கிறாய்.ஆனாலும் அதனால் என்ன பயன்? என்னைப் போல உன்னால்..அழகாக ஆட முடியாது" என்றது.

அப்போது, பாம்பு ஒன்று, மயிலிடம் வர, விரித்த தோகையுடன் மயில் தப்பி ஓட பார்த்தது.உடன் கொக்கு மயிலிடம்.'மயிலே! பார்த்தாயா..உயிருக்கு பயந்து உன்னால் ஓடத்தான் முடிகிறது.ஆனால், என்னை யாரும் தாக்க முயன்றால்..நான் பறந்துடுவேன்.அதுபோல பறக்க உன்னால் முடியாது' என்றது.

மேலும் கொக்கு மயிலிடம்,'கடவுள் உயிரினங்களைப் படைக்கும் போது, ஒவ்வொரு உயிரினத்திற்கும் , ஒவ்வொரு திறமையைக் கொடுக்கிறார்,அதனால் உலகில், திறமை இல்லாதது என ஏதும் இல்லை.அதே நேரம், எல்லாத் திறமையைக் கொண்ட உயிரினமும் கிடையாது' என்று கூறியபடியே, கிடைத்த மீன் ஒன்றைக் கவ்விக் கொண்டு பறந்தது.

அதே நேரம், தன்னைக் கொத்த வந்த பாம்பை, கழுகு ஒன்று பறந்து வந்து கொத்திச் சென்றதையும் மயில் பார்த்தது.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவு : மயிலின் கர்வம் அழிந்தது...

ADHI VENKAT said...

அருமையான நீதியை சொல்லும் கதை. கடவுளின் ஒவ்வொரு படைப்பிற்கும் காரணம் உண்டு.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

Thanks Aadhi.

sury siva said...

அவனவன் செய்த வினையை
அவனவன் அனுபவிக்கத்தான் வேணும்

எடுத்துச்சொன்ன விதம் பிரமாதம்.

சுப்பு தாத்தா.
வலைச்சரம் வழியே ஐ கேம் ஹியர்.
www.subbuthatha.blogspot.in

Kanchana Radhakrishnan said...


வருகைக்கு நன்றி sury Siva.