ஒரு கிராமத்தில் குரங்கொன்று இருந்தது.
ஒரு நாள் அது மரத்தில் ஒடி விளையாடியபோது,உச்சாணிக் கொம்பில் இருந்து தவறி விழுந்து படு காயமடைந்தது.
அதனால் எழுந்து நடக்க முடியவில்லை.உணவு தேடவும் வழியில்லை.மரத்தின் அடியிலே படுத்துக் கிடந்தது.
அம்மரத்தின் அருகில் ஒரு சிறு குடிசையில் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவன் அந்தக் குரங்கைப்பார்த்து மனம் வருந்தி அதை தன் குடிசைக்கு எடுத்து சென்று அடிபட்ட காலுக்கு மருந்திட்டு, உண்ண உணவும் கொடுத்தான்.
நாளடைவில் குரங்கு குணமானது.அப்போதுதான் அந்த குடிசையை நன்கு பார்த்தது. குடிசையின் உச்சியில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது.அதன் வழியே வெய்யிலும்,மழை என்றால் மழை நீரும் குடிசைக்குள் விழுவது தெரிந்தது.
குரங்கு உடனே வெளியே வந்து,மரத்தில் ஏறி,இலைகளையும் சிறு கிளைகளையும் எடுத்து வந்து,குடிசையின் உச்சிக்கு சென்று ஓட்டையை அடைத்தது,
இப்போது குடிசையில் ஓட்டையும் இல்லை,வெய்யிலோ,அல்லது மழையின் பாதிப்போ இல்லை.
அந்த ஏழை தனக்கு செய்த உதவியை குரங்கு எண்ணி,தன்னால் முடிந்த பிரதியுபகாரத்தை செய்தது பாராட்டுக்குரியது.
நாமும் நமக்கு யாரேனும் சிறு உதவி செய்தாலும் அதை மறக்காமல் பெரிதாக எண்ணி ,நம்மால் முடிந்த நல்ல காரியங்களை
உதவியவர்களுக்கு செய்ய வேண்டும்
9 comments:
வருகைக்கு நன்றி பழனி. கந்தசாமி.
சிறிய கதையாயினும்
ஆழமான சிந்தனைக்கு வழி வகுக்கும்
அருமையான கதை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
கருத்துள்ள நல்ல கதை...
நல்லதொரு நீதியை சொன்ன கதை.
//
Ramani S said...
சிறிய கதையாயினும்
ஆழமான சிந்தனைக்கு வழி வகுக்கும்
அருமையான கதை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Ramani.
// திண்டுக்கல் தனபாலன் said...
கருத்துள்ள நல்ல கதை...//
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
//
கோவை2தில்லி said...
நல்லதொரு நீதியை சொன்ன கதை.//
Thanks Aadhi
செய் நன்றி மறக்காதே என சிறப்பாய் சொன்ன கதை...
ரசித்தேன்.
வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.
Post a Comment