காடு ஒன்றில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தினமும் மற்ற மிருகங்களைக் கொன்று பசியாறி வந்தது.நாளாக ஆக அதற்கும் வயதாகி, வலுவிழந்தது.அதனால் தனக்குத் தேவையான உணவை வேட்டையாட அதனால் அலைய முடியவில்லை.
ஒருநாள் அது நரி ஒன்றைக் கூப்பிட்டு, தனக்கு அன்றாடம் தேவைக்கான உணவிற்கான மிருகத்தை, நயமாகப் பேசி அழைத்து வருமாறும், அப்படி அது அழைத்து வரும் மிருகத்தை அடித்து தான் தின்றது போக , மீதத்தை நரி உண்ணலாம் என்றும் கூறியது. நரியும், அதற்கு ஒப்புக் கொண்டது.
காட்டை ஒட்டி இருந்த நகரில் நான்கு பசுக்கள் தினமும் ஒற்றுமையாய் புல் மேய்ந்து வந்தன.அவற்றைப் பார்த்த நரிக்கு நாவில் எச்சில் ஊறியது.இப்பசுக்களை சிங்கத்திடம் அழைத்துச் சென்றால் தினமும் தனக்கு உணவு கிடைக்கும் என எண்ணி அவற்றிடம் சென்று பேசியது.ஆனால் ஒற்றுமையாய் இருந்த பசுக்கள் நரியை விரட்டி அடித்தன.
நரி ஒரு தந்திரம் செய்தது..பசுக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடிவெடுத்தது.
முதலில் ஒரு பசுவிடம் சென்று..'எனக்குத் தெரிந்து..மற்ற பசுக்களை விட நீ இளைத்து இருக்கிறாய்.உனக்குத் தேவையான புல் கிடைக்கவில்லை என எண்ணுகிறேன்.அருகிலேயே..ஒரு புல்வெளி உள்ளது.பசுமையான புற்கள்.நீ தனியே வந்தால் அவற்றை உண்டு ருசிக்கலாம்.ஆனால் உன் நண்பர்கள் உன்னுடன் வந்தால், உன் பங்கு சிறிதாகிவிடும்' என்றது.
பச்சைப் பசேல் என்றிருக்கும் புல்லைத் தின்ன ஆசைப்பட்ட அந்த பசு..மற்ற மூன்று பசுக்களிடமும் சொல்லாது, நரியுடன் சென்றது.நரி அப்பசுவை, சிங்கம் இருக்குமிடம் அழைத்துச் சென்றது.சிங்கமும், தனியே வந்த அப்பசுவைக் கொன்று உண்டது.
அப்படியே, மற்ற பசுக்களையும் பிரித்து நரி அழைத்துச் சென்று சிங்கத்திற்கு உணவாக்கியது.
பசுக்கள் ஒற்றுமையாய் இருந்தவரை அவற்றை அணுக முடியாத நரி, அந்த ஒற்றுமையைக் குலைத்து, அவற்றைப் பிரித்து அழித்துவிட்டது.
நாமும், நம் குடும்பம், சுற்றம், சூழலுடன் ஒற்றுமையாய் இருந்தால்..நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
8 comments:
ஒற்றுமையே பலம் என்பதை தெளிவாக்குகிறது இந்த கதை.
Thanks for the comment Aadhi.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.... நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு...
சிறப்பாகச் சொன்ன நீதிக்கதை....
நாமும், நம் குடும்பம், சுற்றம், சூழலுடன் ஒற்றுமையாய் இருந்தால்..நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது//
இன்றைய நிலையில் அவசியமான கதை
எளிமையாக அருமையாகச் சொல்லிச் சென்றது
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
//nuary 22, 2013 at 5:06 PM
வெங்கட் நாகராஜ் said...
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.... நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு...
சிறப்பாகச் சொன்ன நீதிக்கதை....//
வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.
uary 22, 2013 at 5:39 PM
Ramani said...
நாமும், நம் குடும்பம், சுற்றம், சூழலுடன் ஒற்றுமையாய் இருந்தால்..நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது//
//இன்றைய நிலையில் அவசியமான கதை
எளிமையாக அருமையாகச் சொல்லிச் சென்றது
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Ramani.
இன்றை வலைச்சர அறிமுகப்படுத்தலில் உங்கள் பதிவைய பற்றியும் சொல்லியிருக்கிறேன்..
முடிந்தால் வருகைதாருங்கள் நன்றி.
http://blogintamil.blogspot.com/2013/01/blog-post_25.html
வலைச்சரத்தில் என்னுடைய "சிறுவர் உலகம்" பற்றி எழுதியமைக்கு நன்றி Riyas.
Post a Comment