Sunday, November 18, 2012

114 .தேவையில்லாதது ஏதுமில்லை..... (நீதிக்கதை)





முனியனிடம் சில ஆடுகளும் ஒரு நாயும் இருந்தன. தினமும் அவன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வான்.கூடவே அவனது நாயும் செல்லும்.

மர நிழலில் முனியன் படுத்து உறங்க ...ஆடுகள் புல் மேயும்...அந்த ஆடுகளை ஓநாய் போன்றவை அணுகாமல் நாய் காக்கும்.

முனியன் தூங்கி எழுந்ததும்,தான் சாப்பிட்டுவிட்டு நாய்க்கும் சாப்பாடு அளிப்பான்.இது ஆடுகளுக்கு பிடிப்பதில்லை.

ஒரு நாள் ஆடுகள் முனியனிடம் ' நாங்கள் உனக்கு பால் தருகிறோம்...நீ உயிர் வாழ உதவுகிறோம்..ஆனால் நீயோ எங்களை நாங்களாகவே மேய விட்டுவிட்டு ...சும்மாயிருக்கும் நாய்க்கு உணவளிக்கிறாயே ' என்றன.

அப்போது முனியன் ஆடுகளிடம் ' நீங்க சொல்வது சரி..ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள் இந்த நாய் ...நீங்களெல்லாம் மேயும் போது உங்களைப் பார்த்துக் கொள்ளாவிட்டால் ஓநாய் வந்து தினசரி உங்களில் ஒருவரை கொண்டு சென்று உணவாக்கிக்கொள்ளும்.
அப்படி நேராமல் உங்கள் உயிரைக் காக்கிறது இந்த நாய்' என்றான்.

ஆடுகளும் சிந்தித்துப் பார்த்துவிட்டு நாயின் முக்கியத்துவத்தை உணர்ந்தன.

.தேவையில்லாதது என எதுவும் கிடையாது.சற்று சிந்தித்தால் தேவையில்லாதவை என நினைப்பவையின் தேவையும் அவசியமும் புரியும்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

நன்றி...tm2

ப.கந்தசாமி said...

நல்ல பதிவு.

Kanchana Radhakrishnan said...

// திண்டுக்கல் தனபாலன் said...
அருமை...//


வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...


// பழனி.கந்தசாமி said...
நல்ல பதிவு.//


வருகைக்கு நன்றி பழனி.கந்தசாமி.

மகேந்திரன் said...

சிறு துரும்பும் பல் குத்த உதவும்...

அருமையான நீதிக்கதை சகோதரி...

Kanchana Radhakrishnan said...

// மகேந்திரன் said...
சிறு துரும்பும் பல் குத்த உதவும்...

அருமையான நீதிக்கதை சகோதரி...//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மகேந்திரன்.