முருகன் ஒரு கடவுள் பக்தன்.
தமக்கு என்ன வேண்டுமானாலும் அந்த இறைவனை வேண்டினால் போதும் என எண்ணுபவன்.
பல நாட்களாய் அவன் கடவுளை தன் வீட்டிற்கு விருந்து உண்ண வரும்படி வேண்டிக்கொண்டிருந்தான்.
ஒரு நாள் கடவுள் அவன் முன் தோன்றி அன்று இரவு விருந்துண்ண அவன் வீட்டிற்கு வருவதாகக் கூறினார்.
முருகனும் தடபுடலாய் விருந்து ஏற்பாடு செய்தான்.
அவன் இறைவனுக்காக காத்திருக்கையில்....ஒரு வயதான பிச்சைக்காரர்..' ஐயா பசிக்குது. உணவு கொடுங்கள் ' என்று கேட்டார்.
' கடவுள் என் வீட்டிற்கு வரும் நேரம்...நீ இங்கே இருக்காதே..போ..போ..' என பிச்சைக்காரரை விரட்டினான் முருகன்.
ஆனால் இரவு கடவுள் விருந்துண்ண முருகன் வீட்டிற்கு வரவில்லை.
அடுத்த நாள் முருகன் ...இறைவனிடம் " நேற்று ஏன் வரவில்லை" என வினவினான்.
இறைவனும் ...' நான் சொன்னபடி நேற்று வந்தேன்..பிச்கைக்காரர் உருவில்....நீ தான் விரட்டி விட்டாய்' என்றார்.
பின் ..மனிதர்களுக்கு நீ செய்யும் தொண்டே எனக்கு செய்யும் தொண்டு என்று உணர்ந்து கொள் என்றார் கடவுள்.
அன்று முதல் முருகனும் தன்னால் இயன்றவரை ஏழை மக்களுக்கு உதவி வந்தான்.
10 comments:
மிக்க மகிழ்ச்சி... நல்ல நீதிக்கதை... பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...
பகிர்வுக்கு நன்றி .
// திண்டுக்கல் தனபாலன் said...
மிக்க மகிழ்ச்சி... நல்ல நீதிக்கதை... பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.
இணையத்துல இப்படி சிம்பிளான அழகான கதைகளைக் காண முடியலையேன்னு ஏங்கிட்டிருந்த என் ஏக்கம் தீர்ந்தது. அருமையா எழுதியிருக்கீங்கம்மா. தொடர்ந்து வர்றேன். நன்றி.
// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பகிர்வுக்கு நன்றி .//
வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு... உணர வைத்த கதை.
நல்ல பகிர்வுக்கு நன்றிம்மா.
//
நிரஞ்சனா said...
இணையத்துல இப்படி சிம்பிளான அழகான கதைகளைக் காண முடியலையேன்னு ஏங்கிட்டிருந்த என் ஏக்கம் தீர்ந்தது. அருமையா எழுதியிருக்கீங்கம்மா. தொடர்ந்து வர்றேன். நன்றி.//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நிரஞ்சனா.
வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ் .
அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது
வருகைக்கு நன்றி Mohan P.
Post a Comment