Monday, October 24, 2011

90. ஒற்றுமை நீங்கின்........(.நீதிக்கதை )



வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்திருந்தான்.அவன் எதிர்பார்த்தபடி பல பறவைகள் வலையில் சிக்கின.

அவற்றைப் பிடிக்க அவன் வலையின் அருகே வந்தான்.உடனே அனைத்துப் பறவைகளும் வலையையே தூக்கிக்கொண்டு பறந்தன.

வேடனும்...அப்பறவைகளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

அதைப் பார்த்த ஒருவர்' வேடனே..ஏன் வீணாக ஓடுகிறாய்.ஒற்றுமையாய் வானத்தில் பறக்கும் பறவைகளை உன்னால் பிடிக்க முடியாது' என்றார்.

அதற்கு வேடன்..' ஆம்..ஒற்றுமையுடன் அவை பறக்கும் வரையில் அவற்றை என்னால் பிடிக்க முடியாது.ஆனால் அவை ஒற்றுமையுடன் எவ்வளவு தூரம் பறந்து செல்லும்...விரைவில் அவற்றின் ஒற்றுமை நீங்கிவிடும் ' என்றான்.

அதற்கேற்றாற்போல மாலை நேரம் வந்தது.வலையை தூக்கிக்கொண்டு பறந்த பறவைகள் ஒவ்வொன்றும் தன் கூடு இருக்கும் பக்கமே பிடிக்கவேண்டும் என அதனதன் திசையில் வலையை இழுத்தன....இதனால் வலை கிழிந்து வலையுடன் அவை கீழே விழுந்தன.

வேடனும் தான் நினைத்தது நடந்தது என மகிழ்ந்து பறவைகளை பிடித்து சென்றான்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு என்பதை பறவைகள் பின்னரே உணர்ந்தன..

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு... :)))

Yaathoramani.blogspot.com said...

சிறுவர்கள் அனைவருக்கும் அவசியம்
சொல்லித் தர வேண்டிய அற்புதமான கதை
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 2

மகேந்திரன் said...

ஒற்றுமையின் வலிமையை
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.


இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

சகோதரி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.தீபாவளி நல்வாழ்த்துகள்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Ramani.தீபாவளி நல்வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மகேந்திரன்.தீபாவளி நல்வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan said...

// Ramani said...த.ம 2.//

??????