Friday, October 29, 2010

48-குல்லா வியாபாரியும் ..குரங்கும் - நீதிக்கதை

ஒரு ஊரில்  ஒரு குல்லா வியாபாரி இருந்தார்.அவர் தலைக்குல்லாய்களை  ஒரு மூட்டையாகக்  கட்டி  தலையில் சுமந்து வியாபாரம்  செய்து வந்தார் .
வெயிலில்  அவர் அலைவதால் ..அவரும் ஒரு குல்லா அணிந்திருந்தார்    .
ஒருநாள்  குல்லாக்களை  விற்க..தலையில் சுமந்தப்படி  சென்ற அவர் ..ஒரு மரத்தின் கீழ்  மூட்டையை இறக்கி வைத்து விட்டு கண்ணயர்ந்தார் .
அந்த மரத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.அவை கீழே இறங்கி வந்து மூட்டையைப்  பிரித்து அதில் இருந்த குல்லாய்களை ..அதனதன் தலைகளில் அணிந்துக் கொண்டன.
தூக்கம் கலைந்து எழுந்த வியாபாரி ..குல்லா மூட்டையைக் காணாது ..மரத்தை ஏறிட்டு நோக்க ..குரங்குகள் ஒவ்வொன்றும் குல்லாய் அணிந்திருந்தன.
அவற்றிடம் இருந்து குல்லாயை எப்படி வாங்குவது என யோசித்த வியாபாரி ..குரங்குகள் நாம் செய்வதையே திரும்பச் செய்யும் என படித்திருந்தார் .
அதனால் , தன் தலையிலிருந்த  குல்லாயைக் கழட்டி கீழே எறிந்தார் .
அதைப் பார்த்த குரங்குகள் ..தங்கள் தலையில் இருந்த குல்லாய்களையும் கீழே வீசின .
வியாபாரி எல்லாவற்றையும் எடுத்து மீண்டும் மூட்டையாகக் கட்டிக் கொண்டு வியாபாரத்திற்குக்
கிளம்பினார் .
  எந்த காரியத்திலும்..நாம் சற்று  சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம் .

இந்தக் கதையில் வியாபாரி தன் புத்தியை உபயோகித்ததால்  அவரது குல்லாக்களும்
சேதமின்றி திரும்பக் கிடைத்தது .

4 comments:

priya.r said...

வழக்கம் போல நல்ல பகிர்வு மேடம்
பலமுறை கேட்டு படித்த கதை என்றாலும்
நீதி எல்லோருக்கும் பிடிக்கும்

மதுரை சரவணன் said...

// எந்த காரியத்திலும்..நாம் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம் .//

ok good and short. keep it up.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Priya.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மதுரை சரவணன்.