Thursday, October 21, 2010

47- தென்னையும் நாணலும் - நீதிக்கதை

ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன.
தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது.
'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன் ...நான் எல்லாவற்றையும் தாங்குவேன்...எனக்கு
கவலை இல்லை' என்றது தென்னை நாணலைப் பார்த்து.
சில நாட்கள் கழிந்தன்.
மழைகாலம் வர... ஒரு நாள் புயல் ஏற்பட்டது...
புயல் காற்றில் நாணல் தலை வணங்கியது..தென்னையோ புயலை எதிர்த்தது..
தென்னை வேரோடு சாய்ந்தது.
நாணல் எந்த சேதமும் அடையவில்லை.
நாமும் தென்னையைப்போல கர்வமாய் இல்லாமல் நாணலைப்போல அனைவரிடமும் பணிவாக இருக்கவேண்டும்.

5 comments:

எஸ்.கே said...

மிக நல்ல நீதிக்கதை!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி எஸ்.கே.

priya.r said...

வழக்கம் போல நல்ல நீதி கதை மேடம்
என்ன என் பசங்க நாணல் என்றால் என்ன என்று கேட்கும் போது
சரியாக விலக்க தெரியாமல் ரோஸ் செடி மாதிரி என்று சமாளித்து கொள்கிறேன்
போட்டோவில் இருக்கும் சுட்டி பெண் என்ன வகுப்பு படிக்கிறாள் என்று நாங்கள்
தெரிந்து கொள்ளலாமா

Kanchana Radhakrishnan said...

நாணல் என்பதற்கு பதிலாக புல் என்று குழந்தைகளுக்கு சொன்னால் புரியும்.
நீங்கள் கேட்கும் சுட்டிப் பெண் US ல் KG படிக்கும் எனது பேத்தி.
வருகைக்கு நன்றி Priya.

priya.r said...

Thanks mam

Thanks for visting my blog

Your grand daughter is so cute
May i know her name