Thursday, August 19, 2010

38.நோயற்ற வாழ்வும் ...கல்வியும்.-நீதிக்கதைகள்


அருண் ஆறாம் வகுப்பு மாணவன்..அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர்.பிரகாஷிற்கு அவன் தந்தை
கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான்..தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான்.

கடவுள் அவன் முன்னால் தோன்றி ..'அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன்.ஆனால் யோசித்துக் கேள்'என்றார்.

அருண் உடனே..'இறைவா..நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும்' என்றான்.

அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார்.

உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது..அப்பா.அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.

அருணுக்கு பசி எடுக்க..அம்மா உணவு எடுத்து வந்தார்.அருண் உணவில் கை வைக்க அது பணமானது.தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அது பணமானது.பசியால் வாடிய அருண்.....
அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான்.

மீண்டும் இறைவனை வேண்டினான்.இறைவன் தோன்ற ,அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி ...தன்னை மன்னிக்கும்படியும் ..தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான்.

உடன் இறைவன் அருணைப்பார்த்து ..'அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும்..நோயற்ற வாழ்வும் தான் செல்வம்.அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது'
என்று கூறி..அவனுக்கு..அவ்விரண்டையும் அருளினார்.

4 comments:

nis said...

மாணவர்கள் வாசிக்க வேண்டியது

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி nis (Ravana).

priya.r said...

எளிய தமிழில் குழந்தைகளும் படிக்கும் விதத்தில்
கதையை கொண்டு செல்லும் பாங்கு நன்றாக உள்ளது காஞ்சனா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

நன்றி Priya.