Wednesday, August 4, 2010
36.நாரையும் ஓநாயும் (நீதிக்கதைகள்)
ஒரு காட்டில் ஒரு ஓநாய் இருந்தது.அது மிகவும் கெட்ட குணம் கொண்டது.
தினமும் ..பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையோ ..பறவைகளையோ கொன்று தன் பசியை தீர்த்துக்கொள்ளும்.
ஒரு நாள் அது இறந்த ஒரு மிருகத்தின் உடலை தின்றபோது ..அறியாமல் ஒரு எலும்புத் துண்டையும் சாப்பிட்டது. அந்த எலும்புத்துண்டு
அதனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது.
அதனால் ...அவதிப்பட்ட ஓநாயால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை..
ஒரு நாரையை அது அணுகி ...அதன் அலகால் எலும்புத்துண்டை அகற்றுமாறும்..அப்படி அகற்றினால் அந்த நாரைக்கு பரிசு தருவதாகவும் கூறியது.
சரியென்று நாரையும் தன் நீளமான அலகை ஓநாயின் தொண்டைக்குள் விட்டு அங்கே சிக்கிக்கொண்டிருந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது.
பின் நாரை ..ஓநாயிடம் பரிசு கொடுக்குமாறு கேட்டது....
உடன் ஓநாய்'உனக்குத்தான் ஏற்கனவே வெகுமதி கொடுத்துவிட்டேன்,என்னைப்போன்ற ஓநாயின் வாயில் உன் தலையை விட்டுவிட்டு ...அதை பத்திரமாக வெளியே எடுக்க
அனுமதித்தேனே,,அதுவே உனக்கு சிறந்த பரிசு தான்' என்று கூறிவிட்டது.
நாரை ஏமந்தது...
கொடியவர்களுக்கு உதவி செய்தால் ..பின் அவற்றிடமிருந்து உயிர் தப்புவது பெரிய காரியமாகிவிடும்.
ஆகவே தீயவரைக் கண்டால் ஒதுங்குவதே சிறந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்ல பதிவுங்க ;உங்களுக்கு எனது முதல் வாழ்த்துங்க;
இந்த மாதிரி நீதிகதைகள் சொல்லி குழந்தைகளை தூங்க வைக்க எனக்கு ரொம்ப பயன்படும்.
மிக்க நன்றி காஞ்சனா.
தினமும் குழந்தைகளுக்கு என்ன கதை சொல்வது என்று தலையை பிய்த்துக்கொள்ளும் பெற்றோருக்கு ஒரு விடிவு காலம்.வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி Priya.
வருகைக்கு நன்றி Geetha Ravichandran.இந்த வலைப்பூவின் நோக்கமே குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் சொல்லவேண்டும் என்பதுதான்.
Post a Comment