Friday, July 23, 2010

34. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (நீதிக்கதை)




ஒரு தந்தைக்கு நாலு பிள்ளைகள் இருந்தனர்.அவர்கள் தங்களுக்குள் அவ்வப்போது சண்டைப் போட்டு வந்தனர்.அதனால் மனம் வருந்திய தந்தை...அவர்களிடையே எந்த வழியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று யோசித்தார்.

பின் ஒரு நாள் அவர் தன் பிள்ளைகளிடம் ஒரு கட்டு சுள்ளி விறகுகளைக் கொண்டு வரச் சொன்னார்.

பின்னர் ஒவ்வொரு பையனிடமும் அந்தக் கட்டைக் கொடுத்து அதை துண்டுகளாக உடைக்கும்படியாகக் கூறினார்.மகன்கள் நால்வரும் தனித்தனியாக தங்கள் பலத்தை உபயோகித்து சுள்ளிக் கட்டை உடைக்க முயன்றனர்.

ஆனால்...அதை அவர்களால் உடைக்க முடியவில்லை...

பின்னர் தந்தை அந்தக் கட்டை அவிழ்த்து.....சுள்ளிக் குச்சிகளைத் தனித்தனியே எடுத்து ஒடிக்கக் கொடுத்தார்.....அவர்கள் சுலபமாக ஒடித்து விட்டனர்.

தந்தை தன் புதல்வர்களைப் பார்த்து 'பார்த்தீர்களா..முதலில் இருந்த சுள்ளிக் கட்டு போல நீங்கள் ஒற்றுமையாக ஒன்றாக வாழ்ந்தால் உங்களை யாரும் அசைக்க முடியாது.அதனால் உங்களுக்கு எப்போழுதும் துன்பம் வராது....ஆனால் ஒற்றுமையில்லாமல் தனித்தனியாக பிரிந்தீர்களானால் இந்த சுள்ளிக் குச்சிகளைப் போல எளிதில் உடைபட்டு அழிந்து விடுவீர்கள்'.என்று புத்திமதி கூறினார்.

அதைக் கேட்ட புதல்வர்கள்...ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து ஒற்றுமையாக இருந்தனர்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
இன்று இந்த கதையை நாம் பெற்ற இரு பிள்ளைகளிடம் கூறும் பொழுதே சொல்கிறார்கள்- அப்பா எனக்கு தனியாக ஒரு கதை சொல்லு, அவனுக்கு தனியாக அந்த ரூமில் போய் சொல்லு

இரண்டு வயதிலியே தனி அறை, தனி கழிப்பிடம், தனி வீடியோ கேம்.

Kanchana Radhakrishnan said...

நீங்கள் சொல்வது உண்மைதான்..
வருகைக்கு நன்றி ராம்ஜி

priya.r said...

ஹரே கிருஷ்ணா

நல்ல பதிவுங்க மேடம் .ஒற்றுமையால் ஏற்படும் நற்பலன்களை நல்ல எடுத்துகாட்டை சொல்லி
எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியதற்கு நன்றிகள் மேடம் .
எங்கே மேடம் ,இப்போ எல்லாம் ஒரு குழந்தையே போதும் என்று பெரும்பாலோரின் என்னமாக இருக்கிறது
என்னுடன் பிறந்தவர்களுக்கும் ,என் கணவருடன் பிறந்தவர்களுக்கும் ஒரே குழந்தை தான் மேடம் .
எனக்கு மட்டும் தான் மூன்று ஆண்
குழந்தைகள்!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி பிரியா

vcpoorna said...
This comment has been removed by the author.
vcpoorna said...

Super Examples Thanks