Friday, April 2, 2010

14.ஆண்டவன் படைப்பில்


ஒரு காட்டில் இருந்த மான் தண்ணீர் குடிக்க தண்ணீர் அதிகம் இருந்த குளத்தருகே வந்தது.

தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்தது.தனக்கு ஆண்டவன் அளித்துள்ள அழகான உருவத்தையும்...புள்ளிகளையும் கொம்புகளையும் கண்டு மகிழ்ந்தது.

அப்போது சிறுத்து நீண்ட தன் கால்களைப் பார்த்தது.என்னை இவ்வளவு அழகாக படைத்த இறைவன் ...கால்களை இப்படி படைத்துவிட்டாரே என வருந்தியது.

அச்சமயம் ஒரு சிங்கம் ...அந்த மானை அடித்து சாப்பிட எண்ணி மானை நோக்கிப் பாய ...அலறி அடித்து மான் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடி தப்பியது.

அப்போது அது.. ஆண்டவன் தனக்கு ஏன் இப்படிப்பட்ட கால்களைக் கொடுத்தான் என்பதை உணர்ந்து கடவுளுக்கு நன்றியைச் சொன்னது.

ஆண்டவன் படைப்பில் காரணமில்லாமல் எதையும் அவன் செய்வதில்லை

4 comments:

இராகவன் நைஜிரியா said...

உலகத்தில் படைக்கப் பட்ட ஓவ்வொன்றுக்கும் ஒரு காரணத்துடன் படைக்கப் பட்டு இருக்கின்றது என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

Kanchana Radhakrishnan said...

நன்றி ராகவன்

Unknown said...

ஆண்டவன் படைப்பில் ஓவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்பதை அறிவுறுத்துகிறீர்கள். நன்று.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

Kanchana Radhakrishnan said...

நன்றி Punitha