Wednesday, April 14, 2010

19.ஆட்டின் புத்திசாலித்தனம்


ஒரு காட்டில் ஓநாய் ஒன்று இருந்தது..அது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து ..ஊரில் இருந்த ஆடு..மாடுகளை வீழ்த்தி உண்டு வந்தது..

அதே ஊரில் மாடசாமி என்பவன் ஒரு ஆட்டை வளர்த்து வந்தான்.அந்த ஆடு புத்திசாலியாக வளர்ந்தது...

ஒரு நாள் இரவு ஊருக்குள் வந்த ஓநாய் மாடசாமியின் ஆட்டைப் பார்த்துவிட்டது,அதன் மீது பாய தயாரானது...ஆடோ..உயரமான இடத்திற்கு ஓடியது.அங்கிருந்தபடியே புத்திசாலியான அந்த ஆடு..
கீழே இருந்த ஓநாயிடம் ..'உமக்கு உணவாக ஆக நான் தயார்...ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சிறு ஆசை...இவ்வளவு அழகாக உள்ள நீங்கள் பாட...நான் ஆட வேண்டும்' என்று கூறியது.

தன்னை அழகன் என்ற புகழ்ச்சியில் மகிழ்ந்த ஓநாய் பாட சம்மதித்து தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.

அந்த சத்தம் கேட்டு ..தூங்கிக்கொண்டிருந்த ஊர்மக்கள் விழித்தெழிந்து வந்து ஓநாயை அடித்துக் கொன்றனர்.

புகழ்ச்சியில் மயங்கிய ஓநாய் உயிரைவிட்டது.ஊரில் இருந்த ஆடு..மாடுகள் பயமின்றி வாழ்ந்தன...மாடசாமியின் ஆட்டின் புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டினர்.

7 comments:

எல் கே said...

புகழ்ச்சிக்கு மயங்கேல் . இது சிறுவருக்கு மட்டும் அல்ல அனைவர்க்கும் தேவையான நீதிதான்

இராகவன் நைஜிரியா said...

மண், பொன், பெணாசைக்கு பின் மக்கள் மதி மயங்குவது புகழ் ஆசைக்கு என்று கவியரசு கூறியிருப்பது ஞாபகத்துக்கு வருகின்றது.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி LK.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி இராகவன்

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை நண்பரே படம் மிகவும் பொருத்தமாகவுள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள்..

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்

Kanchana Radhakrishnan said...

நன்றி தமிழினி