Sunday, April 11, 2010

18. பயமே கூடாது


ஒரு சிங்கமும் ...யானையும் நண்பர்களாக இருந்தது.

ஒரு நாள் சிங்கம் யானையிடம் தனக்கு சேவல் கூவும்போது பயமாயிருக்கும் என்றது...

அதைக்கேட்ட யானை...சிங்கத்தைப் பரிகசித்தது.. 'பல மிருகங்கள்,உன்னை காட்டுக்கு ராஜா எனக் கூறி உன்னிடம் பயப்படும் போது..கேவலம்..நீ..ஒரு சேவலுக்குப் பயப்படுகிறாய் என்றது..'
'
அப்போது..ஒரு 'ஈ ' ஒன்று பறந்து வந்து..யானையின் காதருகே அமர்ந்தது..உடனே பயந்த யானை..தன் காதுகளை பலமாக ஆட்டியது.

'ஈ' க்கு பயந்த யானையைப் பார்த்து 'என்னை பரிகசித்த நீ கேவலம் 'ஈ' க்கு பயப்படுகிறாயே 'என்றது சிங்கம்.

'அது என் காதிற்குள் போனால் ..நான் அவ்வளவு தான்' என்றது யானை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் பயம்..ஆனால் பயம் என்பதே அர்த்தமில்லாதது...நாம் வழ்வில் எந்த விஷயத்திற்கும் பயமில்லாமல் தைரியமாக செயல்படவேண்டும்.

5 comments:

எல் கே said...

நல்ல கதைகள். உங்கள் பாணி நல்ல இருக்கு. தொடருங்கள்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி LK

இராகவன் நைஜிரியா said...

வெரி நைஸ்.

Kanchana Radhakrishnan said...

நன்றி இராகவன்

Kanchana Radhakrishnan said...

இப்பதிவிற்கு ஆதரவு வாக்களித்தவர்களுக்கும்..எதிர் வாக்களித்த நண்பருக்கும் நன்றி