Monday, March 22, 2010

11 - நாயும் ... எலும்புத்துண்டும்




டாமி என்ற நாய்க்கு....ஒரு நாள் எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது

எலும்பைக் கடித்து அதிக நாட்கள் ஆகிவிட்டபடியால் ..அது மிகவும் சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டு ஓடியது.

வழியில்...ஒரு ஆற்றின் பாலத்தை அது கடக்க நேரிட்டது...

அப்போது ஆற்றின் நிழலில்.. இதன் நிழல் தெரிந்தது.ஆனால் டாமியோ..'வேறு ஒரு நாய் ஒன்று..தன்னை விட பெரிய எலும்புத் துண்டோடு..நிற்கிறது என எண்ணியது.

தன்னிடமிருப்பதைவிட ..அந்த எலும்புத் துண்டு சற்று பெரிதாக இருப்பதாக எண்ணியது.தண்ணீரில் தெரிந்த தன் நிழலுடன் சண்டைபோட்டு ...அதை பறிக்க திட்டமிட்டு தன் நிழலைப் பார்த்து குரைத்தது.

அப்போது ...அதன் வாயிலிருந்த எலும்புத்துண்டு தண்ணீரில் விழுந்தது.டாமி ஏமாந்தது.அதற்கு எதுவுமே இல்லாமல் போயிற்று.

இதனால் நாம் அறிவது என்னவென்றால்..நம் கையில் உள்ள பொருளை விட்டு ..மற்றவர் கையில் உள்ள பொருளுக்கு ஆசைப்படக்கூடாது.

4 comments:

அண்ணாமலையான் said...

கரெக்டா சொன்னீங்க

DREAMER said...

குழந்தைகள் எளிதில் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் கதையை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாமலையான்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Dreamer