Friday, February 18, 2011

65. அன்பே சிறந்தது (நீதிக்கதை)



அந்த வீட்டில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான்.

அப்போது வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

தந்தை 'வாருங்கள்' என்றார்.

'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது...யாராவது ஒருவர் தான் வரமுடியும்...என் பெயர் பணம்...இவர் பெயர் வெற்றி...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்...எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ' வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார்.

ஆனால் குமரனோ ...'அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்...நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட ...அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் குமரனின் தாயோ 'வேண்டாம்...அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும், 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.உடன் குமரனின் அம்மா'அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்...அன்பே முக்கியம்.

இதையே வள்ளுவர்..

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு


என்கிறார்..

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்.இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும்.

சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.

8 comments:

சி.பி.செந்தில்குமார் said...

இதே கதையை பெரியவர் என்பதற்குப்பதில் தேவதை என்று மாற்றி வந்து படித்த ஞாபகம் இருக்கு.ஓக்கே வெல் செட்

CS. Mohan Kumar said...

வலை சரம் மூலம் தான் தங்கள் பதிவை அறிந்தேன். மிக மகிழ்ச்சி. குழந்தைகளை எனக்கு எப்போதும் பிடிக்கும். என் பெண் சிறியவளாக இருந்த போது தினம் இரண்டு புதிய கதைகள் சொன்னால் தான் தூங்குவாள். இப்போது அவள் கதை கேட்பதில்லை. எப்போதேனும் நல்ல கதை என்றால் நானாகவே சொல்வதுண்டு. நீங்கள் பகிரும் கதைகளில் சில நிச்சயம் சொல்கிறேன்

நல்ல பணி. தொடரவும்

CS. Mohan Kumar said...

தமிழ் மணம், இன்ட்லி போன்ற திரட்டிகளில் தங்கள் ப்ளாகை இணையுங்கள். அப்போது தான் நிறைய பேர் வாசிப்பார்கள் நன்றி

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்.

Kanchana Radhakrishnan said...

// Pari T Moorthy said...
தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்...

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி///

வருகைக்கும் அறிமுகத்துக்கும் நன்றி

Kanchana Radhakrishnan said...

//மோகன் குமார் said...
தமிழ் மணம், இன்ட்லி போன்ற திரட்டிகளில் தங்கள் ப்ளாகை இணையுங்கள். அப்போது தான் நிறைய பேர் வாசிப்பார்கள் நன்றி///

வருகைக்கு நன்றி மோகன் குமார்.ஏற்கனவே தமிழ்மணத்திலும் தமிலிழிலும் இணைத்துள்ளேன்.

priya.r said...

நல்ல பதிவு மேடம்
இதே போல கல்வி ,செல்வம் ,வீரம் பற்றி படித்த நினைவு

LOVE IS GOD

Kanchana Radhakrishnan said...

Thanks Priya.